ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தை காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி உயர் நீதிமன்ற வளாக விரிவாக்கத்துக்காக, தற்போது ஆம் ஆத்மி அலுவலகம் உள்ள, ரோஸ் அவென்யூ அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 15ம் தேதிக்குள் காலி செய்யும்படி, ஆம் ஆத்மிக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கெடு விதித்திருந்தது.

இதையடுத்து கால அவகாசத்தை நீட்டித்து தரும் படி, உச்சநீதிமன்றத்தில் ஆம்ஆத்மியினர் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தை காலி செய்ய, ஆகஸ்ட் 10ம் தேதி வரை காலக்கெடு வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News