பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) அரசில் அமைச்சரவையில் பதவிகள் எதுவும் கிடைக்காததால் சிவசேனா அதிருப்தி தெரிவித்துள்ளது.
7 எம்.பி.க்கள் வைத்துள்ள சிவசேனா கட்சிக்கு ஒரு இணையமைச்சர் பதவி வழங்கியதுடன், 2 எம்.பி.க்கள் வைத்துள்ள குமாரசாமிக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதற்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) தரப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரஃபுல் படேல், ஏற்கெனவே மத்திய அமைச்சராக பதவி வகித்திருக்கும் நிலையில், இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.