சத்தீஸ்கர் மாநிலத்தில் பலோதா என்கிற பகுதியில் வழிபாட்டு தலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் பலோடா என்கிற பகுதியில் வழிபாட்டு தலத்தை, அரசு தரப்பினர் இடிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதிக்கு வந்த கும்பல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.
இதையடுத்து அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.மேலும், அங்கிருந்த வாகனங்கள் மீது தீவைத்தனர். இதனால் அப்பகுதி பெரும் பதற்றமாக மாறியது.