டெல்லியில் உள்ள ரயில்வே அருங்காட்சியகம் உட்பட, குறைந்தபட்சம் 15 அருங்காட்சியங்களுக்கு, நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டலை தொடர்ந்து, டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதோடு சேர்த்து, சண்டிகரின் செக்டர் 32 பகுதியில் உள்ள மனநல மருத்துவமனைக்கும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், இறுதியில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆபரேஷன் மற்றும் செக்யூரிட்டி DSP அம்ரா சிங், ஏ.என்.ஐ ஊடகத்திற்கு , இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் குறித்து பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், “ஒட்டுமொத்த கட்டிடத்தையும் நாங்கள் ஆய்வு செய்தோம்.
ஆனால், எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை. ஃபாம் ஸ்குவாடின் இரண்டு அணிகள், தேடுதல் வேட்டையை நடத்தின. அந்த சோதனையில் முடிவில், அனைத்தும் சரியாக உள்ளது என்று தங்களுடைய அறிக்கையை ஃபாம் ஸ்குவாட் வெளியிட்டது” என்று கூறினார்.