விசாரணை தேவை.. இந்தியாவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் GOAL போட்ட கத்தார்.. AIFF அதிரடி..

உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் விளையாட்டு தொடர்களில், FIFA உலகக் கோப்பையும் ஒன்று. 2026-ஆம் ஆண்டு, இந்த போட்டி நடத்தப்பட இருக்கிறது.

இந்நிலையில், கத்தார் நாட்டின் தலைநகரமான தோஹாவில் உள்ள ஜேசிம் பின் ஹமாத் மைதானத்தில், கால்பந்து உலக கோப்பைக்கான தகுதி போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில், இந்தியாவும், கத்தார் அணியும் மோதின.

இந்த முக்கியமான போட்டியில், 1க்கு 2 என்ற கணக்கில், இந்திய அணி நேற்று தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், அனைத்திந்திய கால்பந்து ஃபெடரேஷன், போட்டியின் ஆணையரிடம் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளது. அந்த புகாரில், அவுட் ஆஃப் ப்ளேவில் பந்து இருந்தபோதும், தென் கொரியாவை சேர்ந்த நடுவர் கிம் வூ-சங், கத்தார் அணி வீரர்களை, கோல் போடுவதற்கு அனுமதித்தார். எனவே, இந்த சர்ச்சைக்குரிய கோல் குறித்து, தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று, கூறப்பட்டுள்ளது.

போட்டியின்போது நடந்தது என்ன?

தகுதி சுற்றின், 73-வது நிமிடத்தின்போது, கத்தார் நாட்டு வீரர்கள் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், அதனை இந்தியா அணியின் கேப்டனும், கோல் கீப்பருமான குர் ப்ரீத் சிங் சந்து, தடுத்து நிறுத்தினார்.

அப்போது, அந்த பந்து, அவுட் ஆஃப் ப்ளே என்ற நிலையான, கோட்டுக்கு மறுபுறம் சென்றுவிட்டது. ஆனால், அதனை தவிர்த்து, பந்தை உள்ளே எடுத்து வந்த கத்தார் வீரர், மீண்டும் கோல் அடித்தார்.

கால்பந்து போட்டியின் விதிமுறையின்படி, இவ்வாறு கோல் அடிப்பது விதிமீறல் ஆகும். எனவே, இதுகுறித்து தான், அனைத்திந்திய கால்பந்து ஃபெடரேஷன் புகார் அளித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News