இந்தியாவின் தலைநகர் டெல்லியில், இதுவரை இல்லாத அளவில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இந்த நிலையை சமாளிக்க முடியாத டெல்லி அரசு, தங்களது பங்கு தண்ணீரை, ஹரியானா அரசு திறந்துவிட, உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறி, வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில், ஹரியானா அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், தண்ணீர் வீண் ஆவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இதற்கிடையே, டெல்லியின் தற்போதைய நிலைக்கு, வளங்களை தவறான முறையில் கையாண்டதே காரணம் என்று, ஆம் ஆத்மி அரசை, பாஜகவின் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த விமர்சித்திற்கு டெல்லியின் அமைச்சர் அதிஷி, பதிலடி கொடுத்து வருகிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “விடுவிக்கப்பட்ட தண்ணீர் குறித்து, ஹரியானா அரசு பொய் சொல்கிறது. ஹரியானா அரசின் பிரமான பத்திரம், உண்மையான தண்ணீர் திறப்பு குறித்து தெரிவித்துவிட்டது. இது அவர்களது பொய்யை அம்பலப்படுத்திவிட்டது” என்று கூறினார்.
மேலும், டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவையும் அவர் கடுமையாக விமர்சித்தார். இவ்வாறு, எதிர்கட்சியும், ஆளுங்கட்சியும் ஒருவரையொருவர் விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், இந்திய தலைநகர் டெல்லி தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதால், தண்ணீர் வீணாவதை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையை பட்டியலிட வேண்டும் என்று, டெல்லி அரசாங்கத்திடம் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.