ஐசிசியின் 9-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டி, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் 25-வது ஆட்டம் இந்தியா – அமெரிக்கா விளையாடின. இதில் டாஸ் வென்ற இந்தியா அணி பந்துவீச தேர்வு செய்த நிலையில் அமெரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணியில் தொடக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தன.
எனினும் ஸ்டீவன் டெய்லர் 24 ரன்களும், நிதிஷ் குமார் 27 ரன்களும் எடுத்தனர். அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளும் கைப்பற்ற, அமெரிக்க அணி 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் விராட் கோஹ்லி டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து ரோஹித் சர்மாவும் 3 ஆட்டமிழக்க, ரிஷாப் பண்ட் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அதன் பின்னர் கைகோர்த்த சூர்யகுமார், ஷிவம் தூபே கூட்டணி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இந்திய அணி 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து வென்றது.
சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார். தூபே ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 31 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது பிரிவில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.