குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். இதில் 6-வது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும், மாடிகளுக்கும் பரவியது.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்த சுமார் 49 பேர் உயிரிழந்தனர். இதில் 42 பேர் இந்தியர்கள் என்று அறியப்படுகியது.
இந்த விபத்து தொடர்பாக அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் குற்ற ஆதார பொதுத் துறைத் தலைவர் ஈத் அல்-ஒவைஹான் கூறுகையில், ‘தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 50 வயது வரையிலான இந்தியர்கள். அவர்கள் தமிழ்நாடு, கேரளம் மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்தர்வர்கள்’ என்றார்.
குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தொழிலாளர்கள் குறித்த உதவி எண்ணாக 965-65505246 தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.