குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த துயரத்தை துடைப்பதற்கு அரசு தரப்பிலும், சமூக செயற்பாட்டாளர்கள் தரப்பிலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த முயற்சிகள் அனைத்தையும் பொசுக்கும் வகையில், இளம்பெண் ஒருவர் பேசியிருப்பது, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் ஷீகா மீத்ரே. இவர், குவாரி பேகம் என்ற Youtube சேனல் ஒன்றை நடத்தி வந்தார்.
அந்த சேனலில், மிகவும் ஆபாசமான வீடியோக்களை, தொடர்ச்சியாக அவர் பதிவிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இருக்க, சமீபத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து, தனது ஃபாலோவர்களின் கேள்விக்கு தொடர்ச்சியாக அவர் பதில் அளித்து வந்தார்.
அந்த சமயத்தில், குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமைக்கு ஆதரவாகவும், அதனை தூண்டும் வகையிலும், ஷீகா பேசியிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, காவல்துறையினரின் கவனத்திற்கு சென்றதையடுத்து, அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.