பக்ரீத் பண்டிகை: கிருஷ்ணகிரியில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான பக்ரீத் பண்டிகை வருகின்ற 17-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளியில் புகழ் பெற்ற வாரச்சந்தையில் பக்ரீத் பண்டியை முன்னிட்டு ஆடு, மாடு, கோழி, விற்பனை வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், மற்றும் கர்நாடகா, ஆந்திரா, ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்துள்ளனர்.

இதில் செம்மறி ஆடு, வெள்ளாடு, மறிக்கை, என பல்வேறு வகையான சுமார் 30 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவந்தனர்.

தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, பொள்ளாச்சி, விழுப்புரம், கடலூர், ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகா, பெங்களூர், ஆந்திரா, போன்ற பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள், பொதுமக்கள், ஆடுகளை வாங்க குவிந்துள்ளனர்.

மேலும், ஒவ்வெரு ஆடுகளும் 10,000 முதல் 85 ஆயிரம் வரை விற்பனைகள் செய்யப்பட்டது. இங்கு சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பக்ரீத் பண்டிகையையொட்டி பொதுமக்களும், வியாபாரிகளும், போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.

RELATED ARTICLES

Recent News