ராமரை வணங்கிய கட்சிக்கு படிப்படியாக ஆணவம் வந்ததால், அவர்களின் வெற்றி 241-ஆக குறைந்துவிட்டது என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று (ஜூன் 13) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார், பாஜகவுக்கு தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து விமர்சித்துள்ளார்.
இந்த நிகழ்வில் இந்தரேஷ் குமார் பேசியதாவது:
“ராமரை வணங்கிய கட்சிக்கு படிப்படியாக ஆணவம் வந்ததால், அவர்களின் வெற்றி 241-ஆக குறைந்துவிட்டது. இருப்பினும், தனிப் பெரும் கட்சியாக இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு தேவையான வெற்றி கடவுளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், ராமர் நம்பிக்கை இல்லாமல் எதிர்த்தவர்களுக்கு ஆட்சி கிடைக்கவில்லை. அவர்கள் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தும் 234 இடங்கள் மட்டுமே கிடைத்தது. அவர்கள் அனைவரும் இணைந்தும் இரண்டாம் இடம்தான் பெற முடிந்தது.
ராமர் யாரையும் கைவிடமாட்டார். அனைவருக்கும் நீதி வழங்குவார். ராமர் மக்களை காப்பாற்றுவார். அவர், ராவணனுக்குகூட நன்மையை செய்துள்ளார். எனத் தெரிவித்தார்.