வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தி கோட். இந்த படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மைக் மோகன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முக்கியமான காட்சிகளில் வருவது போல் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தி கோட் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்ற நிலையில் படத்தின் சி.ஜி பணிகளும் மிக வேகமாக நடைபெற்றது.
தற்போது கோட் படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டீவி, ரூபாய் 90 கோடிகளுக்கு வாங்கி உள்ளது.
படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே ரூபாய் 90 கோடிக்கு வியாபாரம் ஆகிவிட்டதால் விஜய் ரசிகர்களுக்கு இந்த தகவல் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.