ஏரியில் மண் கொள்ளை அடிக்க ஊர் மக்களுக்கு பண பட்டுவாடா!

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் 200 அடியில் சாலை அமைத்து வருகின்றனர்.

திருவள்ளூரில் இருந்து திருநின்றவூர் வரை இந்த சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை அமைக்க அருகே உள்ள நீர்நிலைகளில் இருந்து சவுடு மண் அல்லப்பட்டு வருகிறது.

அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டம், அயத்தூர் ஏரியில் 50.625 கன மீட்டர் சவுடு மண் அல்ல மாவட்ட நிர்வாகம் (EKK infrastructure) தனியார் நிறுவனத்திற்கு 5 மாதத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் கடந்த 10 நாட்களிலேயே 50.625 கனமீட்டர் மண்ணை அல்லிவிட்ட நிலையில் மேலும் மண் அல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் மக்களை சரிகட்ட தனியார் நிருவனம் அயத்தூர் ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு ரேஷன் அட்டைத் தாரர்களுக்கும் தலா 1500 வழங்க முடிவு செய்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் அயத்தூர் துலுகத்தம்மன் ஆலயம் முன்பு வழங்கினர்.

ஒவ்வொரு ரேஷன் கார்டையும் பெற்ற ஊர் முக்கியஸ்தர்கள் நிவாரணம் வழங்குவது போல் 1500 தொகையை வழங்கினர்.

இதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெற்றுச் சென்றனர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏரியின் கரையை உடைத்து மண் அல்லிவருவதால் மழை வந்து ஏரி நிரம்பினால் அது அருகே உள்ள குடியிருப்புகளை மூழ்கடித்துவிடும் என அச்சம் அருகே உள்ள குடியிருப்பு வாசிகள் இடையே உள்ளது. அதேபோல் அளவுக்கு அதிகமாக மண் அல்லினால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட 200 ஏக்கர் விவசாயம் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற புகாரும் உள்ளது.

RELATED ARTICLES

Recent News