மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்: காங்கிரஸ்!

மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம், இது இயல்பான ஒரு நிலைதான் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மல்லிகார்ஜுன கார்கே, “தற்போதைய மத்திய அரசு சிறுபான்மை அரசு. இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். இது இயல்பான ஒரு நிலைதான். மோடியின் இந்த அரசை மக்கள் சிறுபான்மை அரசாக ஆக்கி இருக்கிறார்கள். கூட்டணி அரசு குறித்து மோடியே பலமுறை விமர்சனங்களை வைத்திருக்கிறார். கூட்டணி அரசு என்பது கிச்சிடி அரசு என்றும், பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி அரசு என்பது எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்றும் அவர் கூறி இருக்கிறார். அதோடு, கூட்டணி அரசில் ஆட்சியாளர்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் அவர் கூறி இருக்கிறார். இவையெல்லாம் அவர் கூறியவை. அவற்றையே நான் திரும்பச் சொல்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News