தமிழக நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமிதரிசனம் செய்வதற்காக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்துள்ளார்.
இவர் ரோப்கார் மூலமாக மலைக்கோவிலுக்கு செல்லும்போது மின்தடை ஏற்பட்டது. இதனால் ரோப்கார் பாதியிலேயே அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.
சுமார் 2 நிமிடங்களுக்கு பிறகு மின்சாரம் வந்தவுடன் மீண்டும் ரோப்கார் இயக்கப்பட்டது. தொடர்ந்து மலைக்கோவிலுக்கு சென்ற நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழனிமுருகனை தரிசனம் செய்தார்.
மின்தடை காரணமாக ரோப்கார் பெட்டி பாதியிலேயே அந்தரத்தில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.