அதிமுக தேர்தலை புறக்கணிக்க இதுதான் காரணம் -ஆர்.எஸ் பாரதி

விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை அதிமுக, தேமுதிக கட்சிகள் புறக்கணித்துள்ளது.

இந்நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு டெபாசிட் பறிபோய்விடும் என்ற பயத்தால் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது.

வன்னியர் சமூகத்தினருக்கு திமுக பல நன்மைகளை செய்துள்ளதால் எதையும் சந்திக்க ஆற்றல் திமுகவுக்கு உள்ளது. திமுக ஆட்சிகள் பயன்பெற்ற மக்கள் அனைவரும் அன்புமணி சொன்னால் கூட திமுகவுக்கு தன் வாக்களிப்பார் என்றார்.

RELATED ARTICLES

Recent News