இத்தாலி நாட்டில் G7 உச்சிமாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியும், போப் பிரான்சிஸ்-ம் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படம், கேரள காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
மேலும், கடைசியாக போப் கடவுளை சந்தித்துவிட்டார் என்று கூறப்பட்டிருந்தது. அதாவது, “நான் கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட நபர்” என்ற பிரதமர் மோடியின் பிரச்சார உரையை, கேரள காங்கிரஸ் கட்சி விமர்சித்திருந்தது.
ஆனால், இதற்கு பாஜகவின் கேரள மாநில தலைவர் கே.சுரேந்திரன், கடும் விமர்சனங்களை பதிவிட்டு வந்தார். மேலும், இந்த பதிவு, கிறிஸ்துவ சமூத்தினரையும், போப் ஆண்டவரையும் இழிவுப்படுத்தும் வகையில் உள்ளது என்றும், அவர் கூறியிருந்தார்.
இவ்வாறு, பலர் தங்களது விமர்சனங்களை கூறி வந்தனர். இந்நிலையில், கேரள காங்கிரஸ் கட்சி, அந்த பதிவை தற்போது எக்ஸ் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியின் கேரள மாநில பிரிவு, தங்களது வருத்தங்களையும் தெரிவித்துள்ளது. அதாவது, நாங்கள் போப்-ஐ விமர்சிக்கும் வகையில், இந்த பதிவை வெளியிடவில்லை என்றும், பிரதமர் மோடியை விமர்சித்ததற்கு, நாங்கள் எந்தவொரு பரபரப்பும் அடையவில்லை என்றும், அவர்கள் கூறியுள்ளனர்.