சினிமா
வழிவிட்ட புஷ்பா 2.. ரிலீஸ் தேதியை லாக் செய்த தங்கலான் படக்குழு!
இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு உள்ள திரைப்படங்களில் ஒன்று புஷ்பா 2. இப்படம், வரும் ஆகஸ்டு 15-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், தற்போது இப்படத்தை வரும் டிசம்பர் 6-ஆம் தேதி அன்று ரிலீஸ் செய்ய இருப்பதாக, படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த திரைப்படம் ஆகஸ்டு மாத ரேஸில் இருந்து விலகியுள்ளதால், அதே தேதியில், விக்ரமின் தங்கலான் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று அல்லது நாளை வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)