நீட் விவகாரம்: பிரதமர் நரேந்திர மோடி வழக்கம் போல் மவுனம்- ராகுல் காந்தி!

நீட் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி வழக்கம் போல் மவுனம் சாதிக்கிறார் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “நீட் தேர்வு ஊழலால் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி வழக்கம் போல் மவுனம் சாதிக்கிறார். பிஹார், குஜராத், ஹரியாணா மாநிலங்களில் நடந்துள்ள கைதுகள், நீட் தேர்வு செயல்பாட்டில் திட்டமிட்ட ஊழல் நடந்துள்ளதைத் தெளிவாகக் காட்டுகிறது. பாஜக ஆளும் இந்த மாநிலங்கள்தான் வினாத்தாள் கசிவின் மையமாக மாறியுள்ளன.

வினாத்தாள் கசிவதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்படும் என்றும் அதன் மூலம் இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்றும் நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளித்துள்ளோம். எதிர்க்கட்சி என்ற வகையில் எங்களது பொறுப்பை நிறைவேற்றி, நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் குரல்களை தெருக்களில் இருந்து நாடாளுமன்றம் வரை வலுவாக எழுப்பவும், வினாத்தாள் கசிவதைத் தடுக்க கடுமையான சட்டங்களை உருவாக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News