விமானத்துறையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம்.. – சுற்றிக்கை வெளியிட்ட DGCA!

பெண்ணுரிமை, சமத்துவம், பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றிற்கு எதிராக, தந்தை பெரியார் காலத்தில் இருந்து, பல தலைமுறைகளாக பேசி வருகிறோம். இருப்பினும், இன்னும் பல துறைகளில், பெண்களுக்கு எதிரான விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஒருசில துறைகளில், பெண்களின் பங்களிப்பு குறைவாகவும், இல்லாத சூழ்நிலைகளும் இருந்து வருகிறது. அவ்வாறு பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ள துறைகளில் ஒன்று விமானத்துறை.

இதனை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, சிவில் விமான போக்குவரத்தின் பொது இயக்குநரகம் என்று அழைக்கப்படும் DGCA சுற்றிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவில் உள்ள விமான போக்குவரத்துத்துறையில், 2025-ஆம் ஆண்டுக்குள், பல்வேறு பதவிகளில், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், விமானத்துறையில் பெண்களின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும் வகையிலான பயிற்சி பட்டறைகளை நடத்த வேண்டும், நிறுவனத்தில் உள்ள பாலின சார்பு கொண்ட பிரச்சனைகளை கண்டறிய வேண்டும் மற்றும் பெண் பணியாளர்கள், வேலையையும், சொந்த வாழ்க்கையையும் சமநிலையுடன் கொண்டு செல்வதை, மேம்படுத்த வேண்டும் ஆகிய 3 வழிமுறைகள், விமானத்துறை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News