முன்னாள் எம்.பி.யான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து வந்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானிடம் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால் ஆதர் ரஞ்சன் சவுத்ரியின் ராஜினாமா ஏற்கப்பட்டதா? உள்ளிட்ட எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.