ஹரியானா மாநிலத்தில் போதையில் இருந்த கார் டிரைவர் ஒருவர், நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், டிரைவரிடம் விசாரணை நடத்தினார். அபராதம் வசூலிக்க ஆவணங்களை காட்டுமாறு கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
போலீஸ் அதிகாரி காருக்குள் சென்று ஆவணங்களை சோதனை செய்த போது திடீரென காரை ஒட்டியுள்ளார். கார் கிளம்பியதால், அந்த போலீஸ்காரர் வேகமாக இழுத்துச் செல்லப்பட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் மற்றும் மற்ற போலீஸ் அதிகாரிகள் அவரை மீட்டனர். அந்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.