சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி 8.5 பவுன் நகையை திருடிய வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பங்காரம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ரவிக்குமாருக்கும் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த பெண்ணுடன் ரவிக்குமார் சமூக வலைதளங்கள் மூலமாக பேசியபோது அவர் சினிமாவில் நடிக்க வைப்பதாக பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி நேரில் பார்க்க வேண்டி முகவரி கேட்டுள்ளார்.

தொடர்ந்து அந்த பெண்ணும் முகவரி அளித்த நிலையில் லதாவின் வீட்டிற்கு வந்த ரவிக்குமார் அந்த பெண்ணை ஏமாற்றி வீட்டிலிருந்த 8.5 பவுன் தங்க நகை மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை திருடி சென்று விட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சின்னசேலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காரைக்குடியில் பதுங்கி இருந்த ரவிக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News