பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் கைது

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பிரஜ்வலின் அண்ணனும் மஜத எம்எல்சியுமான சூரஜ் ரேவண்ணா மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜேடிஎஸ் தொண்டர் சேத்தன் என்பவர் இந்த புகாரைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கன்னட சேனலுக்கு நேற்று முன்தினம் இரவு அளித்துள்ள பேட்டியில், “ஜூன் 6-ம் தேதி ஹாசன் மாவட்டத்தில் கனிகட்டா கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் சூரஜ் ரேவண்ணாவை சந்தித்தேன். அப்போது தன்பாலின சேர்க்கையில் ஈடுபடுமாறு வற்புறுத்தினார். இதனை வெளியே சொன்னால் என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்றுவிடுவேன் என மிரட்டினார்” என்றார்.

இதனையடுத்து ஹாசன் போலீசார் சூரஜ் ரேவண்ணாவை நேற்று விசாரணைக்கு அழைத்தனர். அப்போது சூரஜ் ரேவண்ணாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. ரேவண்ணாவின் செல்போனையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று சூரஜ் ரேவண்ணாவை ஹாசன் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பாலியல் சர்ச்சையில் ரேவண்ணாவின் இரு மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News