1996-ஆம் ஆண்டு, ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவான திரைப்படம் இந்தியன். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.
இந்த திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், வரும் 12-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.
ரிலீஸ்-க்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது இந்தியன் 2 ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்பை, வெளியிட்டுள்ளனர். அதன்படி, இந்த ட்ரைலர், 25-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.