மெட்ரோ கழிவுநீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

மதுரவாயலில் மெட்ரோ கழிவுநீர் பணிக்காக தோண்டப்பட்டிருந்த தொட்டியில் இருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

சென்னை மதுரவாயல் பெருமாள் கோயில் தெருவில் குடியிருப்பு பகுதிகளின் கழிவு நீர் வெளியேற்றத்துக்காக மெட்ரோ குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த குழாய்களை இணைக்கும் வகையில் 20 அடி அகலம் 8 அடி ஆழத்தில் கழிவு நீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்தத் தொட்டி நீண்ட நாட்களாக திறந்த நிலையிலேயே இருந்துள்ளது.

இதையடுத்து தொட்டியின் பாதி பகுதியை சமீபத்தில் இரும்பு கம்பிகள் கொண்டு மறைத்துள்ளனர். இருப்பினும் பாதி பகுதி திறந்த வெளியிலேயே அபாயகரமானதாக இருந்துள்ளது.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் (30) என்ற கழிவு நீர் தொட்டியில் சடலமாக மிதந்தபடி மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சடலமாக மீட்கப்பட்ட சரண்ராஜின் உடலில் சிறு காயங்கள் இருப்பதும் அவர் வானகரம் மீன் மார்க்கெட்டில் லோடு தூக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் தவறுதலாக தொட்டியில் விழுந்தாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து தொட்டியில் வீசினரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News