18-வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பாஜக எம்பி பதவியேற்றார்.
மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. பர்துஹரி மஹ்தாப்க்கு குடியரசுத் தலைவர் முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இன்றும் நாளையும் எம்பிக்களுக்கு பர்துஹரி மஹ்தாப் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
குடியரசு மாளிகையில் நடந்த இந்த பதவி பிரமாண விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீஷ் தங்கர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.