அதிமுக ஆட்சியிலும் கள்ளச்சாராயம் விற்கப்பட்டது – திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை

கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து அதிமுக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: “திண்டுக்கல் சிறுமலையைப் போலவே, கள்ளக்குறிச்சியில் கல்வராயன் மலை அமைந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நான் வனத்துறை அமைச்சராக இருந்தபோது, நான் அந்த மலைக்கு போனேன். அங்கு எங்கு பார்த்தாலும் அடுப்பு எரிந்தது. உடன் வந்தவர்களிடம் என்னவென்று கேட்டேன். அவர்கள் சாராயம் காய்ச்சி விற்பதாக சொன்னார்கள்’ என்றார். இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசியதைப் பார்த்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டதாக திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News