இதயத்தின் வரைபடம் வரைந்த மாணவன்.. அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்.. இணையத்தில் எழுந்த சிரிப்பொலி.. வைரல் பதிவு..

பள்ளியில் மாணவர்களாக படிக்கும் காலத்தில், நமக்கு தெரியாத கேள்விகளுக்கு, நமக்கு தெரிந்த பதில்களை சிலர் எழுதுவார்கள். ஒருசிலர், தங்களது வீட்டு சோகக் கதைகளையும், சிலர் சினிமா பாடல்களையும் கூட எழுதி வைத்த கதைகள் உண்டு.

ஆனால், தற்போது மாணவர் ஒருவர், மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தையும் மிஞ்சிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில், பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பதிவில், வகுப்பறையில் வைத்த டெஸ்ட் ஒன்றிற்கு மாணவன் எழுதிய பதில்களும், அதற்கு அவன் வரைந்த வரைப்படமும், பலரை சிரிக்க வைத்துள்ளது. அதாவது, இதயத்தின் வரைபடம் வரைந்து, அதன் செயல்பாடுகள் குறித்து விவரிக்கவும்? என்று Class Test வைக்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு, பதில் அளித்த மாணவன் ஒருவன், தனக்கு தெரிந்த வகையில், இதயத்தை வரைந்திருந்தான். ஆனால், வென்ட்ரிக்கிள், ஏட்ரியம் என்ற இதயத்தின் பாகங்களை குறிப்பதற்கு பதில், ஹரிதா, பிரியா, பூஜா, நமிதா, ரூபா என்ற பெண்களின் பெயர்களை குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், இதயத்தின் செயல்பாடுகள் குறித்து பதில் எழுதும்போது, அந்த பெண்களை பிடிக்கும், அவர்கள் அழகாக இருப்பார்கள், என்னுடன் சமூக வலைதளங்களில் Chat செய்வார்கள் என்று தன் மணதில் இருந்ததை எழுதியிருக்கிறான்.

இந்த பதில்களை படித்த ஆசிரியர், 0 மதிப்பெண் வழங்கியதுடன், பெற்றோரை பார்க்க வேண்டும் என்றும், அந்த Answer Sheet-ல் எழுதியிருக்கிறார். இதுதொடர்பான பதிவுதான், பலரையும் சிரிக்க வைத்துள்ளது.

RELATED ARTICLES

Recent News