கொலோம்பிய நாட்டை சேர்ந்தவர் ஜூஹான் மேன்வேல். வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர், 3 மாதங்களுக்கு முன்பு, அவியான்கா நிறுவனத்தின் விமான டிக்கெட்டை புக் செய்துள்ளார்.
இந்நிலையில், பயண நாள் அன்று, விமானத்தில் பயணிக்க, விமான நிலையத்திற்கு அவர் சென்றுள்ளார். ஆனால், அவரது இருக்கையில், வேறொரு குழந்தை அமர்ந்திருக்கிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், நிறுவன ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் அதற்கு, இரண்டு முறை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்று அலட்சியமாக கூறியுள்ளனர்.
இதற்கு, ஆத்திரம் அடைந்த மேன்வேல், ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து, அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவங்கள் அனைத்தையும் விமானத்தில் இருந்த இன்னொரு பயணி, வீடியோவாக பதிவு செய்து, அதனை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், விமான நிறுவனத்தை விமர்சித்து வருகின்றனர். மேலும், டிக்கெட்டை இரண்டு முறை விற்பனை செய்தது தவறு என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். பெரும்பாலும், மேன்வேல்-க்கு ஆதரவாக தான் பலரும் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.