ஆந்திராவின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் டி. ஸ்ரீனிவாஸ் (76) மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். ஸ்ரீனிவாஸ் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஆந்திராவின் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், மூன்று முறை எம்.எல்.ஏ.வாகவும் ஸ்ரீனிவாஸ் பதவி வகித்துள்ளார்.
அவரது மறைவுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலங்கானா அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.