குஜராத்தின் ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து

டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று அதிகாலை வரை பெய்த மழை காரணமாக விமான நிலையத்தின் டெர்மினல் 1ன் மேற்கூரை இடிந்த விழுந்து விபத்து ஏற்பட்டது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் குஜராத்தின் ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது.

ராஜ்கோட் பகுதியில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை கனமழை பெய்தது. இதன் காரணமாக ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. இந்த விபத்தில் இதுவரை யாரும் காயமடையவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

RELATED ARTICLES

Recent News