ஷாருக்கானின் மகளான சுஹானா கான், தி ஆர்சீஸ் என்ற திரைப்படத்தின் மூலம், பாலிவுட்டில் அறிமுகமானார்.
இந்த படத்தில், இவருடன் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தாவும் இணைந்து நடித்திருந்தார்.
இந்த படத்தில் நடித்ததன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால், இருவரும் நெருங்கி பழகி வருகிறார்கள் என்றும், டேட்டிங் செல்கிறார்கள் என்றும், கிசுகிசுக்கப்பட்டது.
இந்த கிசுகிசு செய்திக்கு வலு சேர்க்கும் வகையில், தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, லண்டன் நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில், இருவரும் பார்ட்டியை கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.