சினிமா
ப்ளெடி பெக்கர் படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்..?
நட்புனா என்னனு தெரியுமா படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் கவின்.
இந்த படத்திற்கு பிறகு, லிஃப்ட், டாடா, ஸ்டார் ஆகிய வெற்றிப் படங்களில், இதுவரை நடித்திருக்கிறார். தற்போது, நெல்சனின் உதவி இயக்குநர்களில் ஒருவரான சிவபாலன் இயக்கத்தில், ப்ளெடி பெக்கர் என்ற படத்தில், நடித்து முடித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில், படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ப்ளெடி பெக்கரின் ரிலீஸ் தேதி தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் வரும் ஆகஸ்டு 2-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளதாம்.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)