பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது.
சென்னை அம்பத்தூர், சர் ராமசாமி முதலியார் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில், அம்பத்தூர் நகரத்தார் மகளிர் சங்கம், நகரத்தார் எழுத்தாளர்கள் அமைப்பு இணைந்து நடத்தும் “பெண்மையை போற்றுவோம்” என்ற தலைப்பில் பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கவும் தமிழ் ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பல நிகழ்ச்சிகள் கடந்த 7 ஆண்டிகலாக நடைபெற்று வருகிறது.
இதில் சிறப்பு விருந்தினராக முருகப்பா குழுமத்தின் மெய்யம்மை முருகப்பன் பங்கேற்றனர்.
வள்ளியம்மை அருணாசலம் எழுதிய “அழைபேசியுடன் நாம்” மற்றும் “தமிழோடு விளையாடு” என்ற தலைப்புகளில் நூல்கள் வெளியிடப்பட்டது.
மேலும் “நமக்குள் இவள்” என்று பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் 10 பெண்களுக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது.
எல்லாரிடமும் ஒரு திறமை ஒளித்துள்ளது, பல பெண்களால் வெளியே வந்து தனது திறமைகளை வெளிடுத்த முடிவதில்லை, பல பெண்கள் வீட்டில் இருந்தபடியே தங்கள் திறமைகளை வெளிபடுத்துகின்றனர். எனவே பெண்களை ஊக்குவிக்க வேண்டியது அவர்கள் குடும்பத்தினர்தான், மேலும் அனைத்து பெண்களும் முன்வந்து இந்த சமூதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.