7ஜி ரெயின்போ காலனி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா?

செல்வராகவன் இயக்கத்தில், சோனியா அகர்வால், ரவி கிருஷ்ணா ஆகியோர் நடித்திருந்த திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், ப்ளாக் பஸ்டர் வெற்றி அடைந்தது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில், இதற்கு முன், யார்? யார்? நடிக்க இருந்தார்கள் என்பது தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, இப்படத்தில், ரவி கிருஷ்ணா கதாபாத்திரத்தில், முதலில், நடிகர் சூர்யாவும், அதன்பிறகு மாதவனும் நடிக்க இருந்தார்கள். ஆனால், வேறொரு படத்தில் பிசியாக இருந்ததால், அவர்களால் நடிக்க முடியவில்லை.

அதன்பிறகு, சோனியா அகர்வால் கதாபாத்திரத்தில், சுப்ரமணியபுரம் பட நடிகை ஸ்வாதி நடிக்க ஒப்பந்தம் ஆனார். 20 நாட்கள் வரை, படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஆனால், அந்த சமயத்தில், ஸ்வாதி படித்துக் கொண்டு இருந்ததால், அவரால் தொடர்ச்சியாக நடிக்க முடியவில்லை. இறுதியாக, ரவி கிருஷ்ணாவும், சோனியா அகர்வாலும் நடித்து, அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

RELATED ARTICLES

Recent News