இந்தியாவின் பிரபல தொழிலாலதிபரும் கிங்பிஷர் நிறுவன உரிமையாளருமான விஜய் மல்லையா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் வாங்கிய ரூ.180 கோடி கடன் பெற்றுக்கொண்டு கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வர அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணானது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில் மும்பையிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளி வர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.