குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்துக்கு பதிலளித்து மக்களவையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார்.
அப்போது பாஜகவினர் மோடி.. மோடி.. என்று முழக்கமிட்ட நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் மோடிக்கு எதிராக முழக்கமிடத் தொடங்கினர்.
மோடி தனது உரையை தொடங்கிய நிலையிலும், எதிர்க்கட்சியினர் அமைதி காக்காமல் தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மணிப்பூருக்கு நீதி வேண்டுமென்றும் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.