தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவில் கலந்துக் கொண்டு, டைட்டில் பட்டம் வென்றவர் தான் ராஜூ ஜெயமோகன்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இருந்த இவர், தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, பன் பட்டர் ஜாம் என்று இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே, காலங்களில் அவள் வசந்தம் என்ற படத்தை இயக்கிய ராகவ் மிர்தாத் என்பவர் தான், இந்த படத்தையும் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.