பேஸ்புக், ட்விட்டர், Youtube என்ற பல்வேறு விதமான சமூக வலைதளங்கள் இருந்தாலும், நண்பர்களுடன் சேட்டிங் செய்வதற்கு வசதியாக இருப்பது வாட்ஸ் அப் செயலி தான். இதனால் தான் இந்த செயலியை உலகம் முழுவதும், பல்வேறு தரப்பினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனம், பயனர்களின் வசதிக்காக, அவ்வப்போது, புதுப்புது அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது அனைவருக்கும் தேவையாக இருந்த சூப்பர் அப்டேட் ஒன்றை கொண்டு வந்துள்ளது. யாருக்காவது தெரியாமல் தவறாக மெசேஜ் அனுப்பிவிடுவோம்.
அதனை தவிர்ப்பதற்கு, Delete For Everyone என்ற புதிய ஆப்ஷன் வழங்கப்பட்டது. மேலும், நமக்கு மட்டும் இந்த மெசேஜ் வேண்டாம் என்று முடிவு செய்தால், Delete For Me என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, டெலிட் செய்ய முடியும். ஆனால், சில நேரங்களில், Delete For Everyone-க்கு பதிலாக, Delete For Me என்ற ஆப்ஷனை க்ளிக் செய்துவிடுவோம்.
இந்த பிரச்சனை சரி செய்வதற்காக, வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இனிமேல், மாறுதலாக க்ளிக் செய்துவிட்டால், Undo என்ற ஆப்ஷன் 5 நொடிகளுக்கு வழங்கப்படும். அந்த நேரத்திற்குள், அதனை மாற்றிக்கொள்ளலாம். வாட்ஸப் பயனர்களுக்கு, இந்த ஆப்ஷன் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.