சாப்பிட மறுத்த கணவன்.. கத்திரிக்கோலால் தாடையை அறுத்த மனைவி.. பரபரப்பு சம்பவம்..

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஹோசகெரேஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ). இவருக்கு, நளினி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்ற மனைவியும், ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், ஜூன் 26-ஆம் தேதி அன்று, சுரேஷ் தனது குடும்பத்தினருடன், வீட்டின் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்றுள்ளனர். பின்னர், இரவு 9 மணிக்கு, தனது மனைவி மற்றும் மகனை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, அருகில் இருந்த மதுபானக் கடைக்கு சுரேஷ் சென்றுள்ளார்.

அங்கு, மது அருந்துவிட்டு, அதே கடையில் உணவும் சாப்பிட்டுவிட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், சுரேஷின் மனைவி அவருடைய தாயின் வீட்டில் இருந்து உணவு எடுத்து வந்து, சுரேஷை சாப்பிட சொல்லி, வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு, தான் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன் என்று சுரேஷ் மறுத்தபோதிலும், நளினி தொடர்ச்சியாக வற்புறுத்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில் கடுப்பான நளினி, “உங்களுடைய தாய் செய்திருந்தால் மட்டும், உணவை சாப்பிட்டிருப்பீர்களே” என்று கூறியுள்ளார்.

தனது தாயை, இந்த விஷயத்திற்கு இழுத்த பிறகு, இருவருக்கும் இடையிலான பிரச்சனை இன்னும் அதிகரித்துள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையில், தனது அருகில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து, சுரேஷை நளினி கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில், தாடை, பின்பக்கம், கை ஆகியவற்றில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று, நளினிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதேபோல், பசவனகுடி பெண்கள் காவல்நிலையத்தில், சுரேஷ் மீது நளினி புகார் அளித்திருக்கிறார்.

அந்த பகுதியை சேர்ந்த காவல்துறையினர், சுரேஷை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். இவ்வாறு, இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இவர்கள் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்த போலீசார், கவுன்சிலிங் வழங்கி, வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

RELATED ARTICLES

Recent News