மணிப்பூர் பற்றி மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையிலான மோதல் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை குறித்து வாய் திறப்பதில்லை. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்கவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி மாநிலங்களவையில் மணிப்பூர் பற்றி பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது : மாநில அரசு மற்றும் மற்றவர்களுடன் சேர்ந்து மத்திய அரசு மணிப்பூரில் அமைதியை கொண்டு வர பணியாற்றி வருகிறது. மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. மாநிலத்தின் அதிகமான இடங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. வன்முறை தொடர்பாக 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News