கற்களை வீசி தாக்கிக்கொண்ட காங்கிரஸ்-பாஜகவினர் : 5 பேர் கைது

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதை கண்டித்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த பகுதியில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் மோதலில் ஈடுபட்ட 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News