வெற்றிக் கோப்பையுடன் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐ.சி.சி டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் கடந்த வாரம் சனிக்கிழமை இந்தியா -சவுத் ஆப்பிரிக்கா மோதின. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 176 இலக்க நிர்ணயித்தது. இதை தொடர்ந்து விளையாடிய அதிரடியாக விளையாடிய சவுத் ஆப்பிரிக்கா 7 ரனில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
புயலால் பார்டாஸில் நான்கு நாட்களாக சிக்கி தவித்து வந்த இந்திய அணி நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று (ஜூன் 4) சரியாக ஆறு மணிக்கு டெல்லி விமான நிலையத்திற்கு உலக கோப்பையுடன் தாயகம் திரும்பினர் டெல்லி விமான நிலையத்தில் இந்திய ரசிகர்கள் உற்சாகமாக மேல தாளங்களுடன் வரவேற்றனர்.
உலகக்கோப்பை வென்ற இந்திய அணியினர் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து வாழ்த்து பெறுகின்றனர் பின்பு இன்று காலை 11 மணியளவில் இந்திய அணியுடன் காலை உணவு அருந்துகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
இந்த நிகழ்ச்சியில் BCCI செயலாளர் ஜெய்ஷா இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்.
மேலும் மாலை 5 மணிக்கு மும்பை வான்கடேவில் உலகக் கோப்பையுடன் வெற்றி அணிவகுப்புடன் நடைபெற உள்ளது அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அணி வகுப்பில் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொள்ளுமாறு ரோஹித் சர்மா தனது எக்ஸ் முகநூலில் பதிவிட்டுள்ளார்.