சசி குமாருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்?

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சசிகுமார். இந்த படத்திற்கு பிறகு, ஒருசில வெற்றி படங்களில் இவர் நடித்திருந்தாலும், பெரும்பாலும் தோல்வி படங்களையே கொடுத்திருக்கிறார்.

இதனால், இவரது மார்கெட் சரிந்து கிடந்தது. ஆனால், தற்போது அயோத்தி, கருடன் ஆகிய வெற்றிப் படங்களில் நடித்திருப்பதால், இவரது மார்கெட் சற்று அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில், சசிகுமார் தற்போது புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் பிக்சர்ஸ் தான், இந்த படத்தையும் தயாரிக்க உள்ளது.

அறிமுக இயக்குநர் இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க உள்ளார். முழுக்க முழுக்க குடும்பத்தை மையப்படுத்தி, இப்படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News