மாணவர்கள் சிலர் திருட்டுத்தனமாக எதையாவது செய்துவிட்டு, ஆசிரியர்களிடம் சிக்குவதை பார்த்திருப்போம். ஆனால், தற்போது தலைமை ஆசிரியர் ஒருவர் செய்த தவறை, கையும், களவுமாக மாணவர்கள் சிலர் பிடித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மசூலிப்பட்டனம் என்ற பகுதியில், அரசு உண்டு உறைவிட பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ஆனந்த் பாபுவிற்கும், அதே பள்ளியில் கணினி ஆப்ரேட்டராக பணியாற்றி வரும் பெண்ணிற்கும் இடையே, தகாத உறவு இருந்துள்ளது. மேலும், இவர்கள் இருவரும், அடிக்கடி விடுதி அறையில், தனிமையில் இருந்துள்ளனர்.
இவ்வாறு இருக்க, சம்பவத்தன்றும், இருவரும் தனிமையில் ஒன்றாக இருந்துள்ளனர். இதனை அறிந்த மாணவர்கள் சிலர், அதனை வீடியோவாக எடுத்து, தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளனர்.
இவ்வாறு பலபேரிடம் சென்ற இந்த வீடியோ, இணையத்திலும் வெளியாகி, வைரலாக பரவி வந்தது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த தலைமை ஆசிரியரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.