உணவு பொருட்களை, ஆன்லைனில் ஆர்டர் செய்தால், அதனை தங்களது வீட்டிற்கே டெலிவரி செய்யும் நிறுவனம் தான் ஜொமோட்டோ.
இந்த நிறுவனம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், Xtreme என்ற புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த சேவையின் மூலம், சரக்கு பொருட்களை டெலிவரி செய்யப்படும் என்று கூறப்பட்டது.
மேலும், ஜொமோட்டோ நிறுவனம் செயல்பட்டு வரும் 800 நகரங்களிலும், இந்த சேவை இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால், உணவு பொருட்கள் டெலிவரி சேவைக்கு கிடைத்த வரவேற்பு, இந்த சரக்கு பொருட்கள் டெலிவரிக்கு கிடைக்கவில்லை.
இதனால், அந்நிறுவனம் தற்போது Xtreme சேவையை நிறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கூகுளின் Play Store-ல் இருந்து, Zomato Xtreme App-ஐ அந்நிறுவனம் நீக்கியுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள ஜொமோட்டோவின் நிர்வாகி, “Zomato Xtreme என்பது ஒரு பரிசோதனை முயற்சி தான்” என்று கூறியுள்ளார். ஆனால், என்னதான் இருந்தாலும், Zomato நிறுவனம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி, தனது Legends என்ற பழைய சேவையை தற்போது புதுப்பித்து, மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் மூலம், ஒரு நபர் புகழ்பெற்ற உணவகங்களின் உணவை, எந்த நகரத்தில் இருந்து வேண்டுமானாலும் ஆர்டர் செய்துக் கொள்ளலாம்.
அதாவது, சென்னையில் உள்ள ஒரு நபர், டெல்லியில் உள்ள மிகப்பெரிய உணவகங்களின் உணவை கூட ஆர்டர் செய்துக் கொள்ளலாம். இந்த சேவை தற்போது அறிமுகமாகியுள்ளது. ஆனால், ரூபாய் 5 ஆயிரம் மதிப்பில் மட்டுமே ஆரம்பகட்ட சேவை தொடங்கப்படுகிறது.
மேலும், ஒரே பரிவர்த்தணையின் மூலம், பல்வேறு உணவகங்களிலும் ஆர்டர் செய்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சேவை தற்போது டெல்லி- NCR மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் மட்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில், வேறு நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.