பாகிஸ்தானில் வரும் 17ம் தேதி முஹரம் ஆஷுரா கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தில் வரும் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘வன்முறையை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வெறுப்பு பேச்சு மற்றும் தவறான கருத்து, தகவல் பகிரப்படுவது தடுக்கப்படும்’ என, பஞ்சாப் மாகாண அரசு தெரிவித்துள்ளது.