தற்கொலை செய்து கொண்ட ரோபோ? தென்கொரியாவில் நடந்த சம்பவம்!

வேலை பளு காரணமாக தொழிலாளர்கள் தற்கொலை செய்துக் கொண்ட பல்வேறு சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், தற்போது, எந்திரங்களே வேலை பளு காரணமாக, தற்கொலை செய்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது, கலிபோர்னியாவை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான பியர் ரோபோட்டிக்ஸ் புதிய ரோபோ ஒன்று உருவாக்கியிருந்தது. இந்த ரோபோவை, தென்கொரியா நாட்டில், குமி சிட்டி கவுன்சில் என்ற உள்ளூர் அரசு நிர்வாகம், தங்களது அன்றாட பணிகளுக்காக வாங்கியிருந்தது.

அதீ நவீன முறையில், சுயமாகவே முடிவுகளை எடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த இந்த ரோபோ, ஆவணங்களை டெலிவரி செய்தல், மேற்பார்வை பார்த்தல் போன்ற பல்வேறு பணிகளை செய்து வந்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் முதல் அந்த ரோபோ வேலை பார்த்து வந்த நிலையில், 2024-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு, அலுவலகத்தின் மாடிப் படியில் விழுந்து கிடந்துள்ளது.

அதன் பாகங்களும், உடைந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தகவலை அறிந்த சில நெட்டிசன்கள், வேலை பளுவின் காரணமாக, அந்த ரோபோ தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக, இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

ஆனால், தொழில்நுட்ப நிபுணர்கள், தொழில்நுட்ப கோளாறுகள், சென்சார் பிரச்சனைகளின் காரணமாக, இவ்வாறு நடந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். தற்போது, இந்த ரோபோவின் உடற்பாகங்கள் சேகரிக்கப்பட்டு, அது கீழே விழுந்து உடைந்ததற்கான காரணங்கள், ஆராயப்பட்டு வருகின்றன.

RELATED ARTICLES

Recent News