அயோத்தி ராமர் கோயிலில், அர்ச்சகர்கள் அனைவரும் காவி நிறத்தில் மேலாடை, தலைப்பாகை, வேட்டி அணிந்திருந்தனர். தற்போது ராமர் கோயிலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், முதல் மாற்றமாக அர்ச்சர்கள் உடையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.
கடவுளுக்கு சேவை செய்யும் அர்ச்சகர்கள், பழம்பெரும் கலாசாரத்தைப் பின்பற்றி இனி மஞ்சள் (பீதாம்பரி) நிற உடையை அணிவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சில உதவி அர்ச்சகர்கள் மட்டுமே மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்தனர். ஆனால், இனி ஒட்டுமொத்த அர்ச்சகர்கள் குழுவும், பீதாம்பரி நிறத்தில் ஆடை அணிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.